ஏமனில் சவுதி விமானப்படைகள் தாக்குதல் 39 பேர் உயிரிழப்பு…

ஏமனில் தலைநகரமான சனா நகரில் உள்ள இராணுவ பொலிஸ் முகாமின் மீது சவுதி அரேபியா தலைமையிலான விமானப்படைகள் நேற்று நடத்திய தாக்குதலில் 39 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப் படையினர் கடந்த இரண்டாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுப் படைகளுடன் புரட்சிப் படையினர் நடத்திவரும் மோதலில் பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த படையினருக்கு சவுதி அரேபியா தலைமையிலான இஸ்லாமியப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. இந்த ஆதரவுடன் நாட்டின் தலைநகரான சனா பகுதியை கைப்பற்றியுள்ள புரட்சிப் படையினர் அந்நகரை தங்களது ஆளுமைக்கு உட்படுத்தி வைத்துள்ளனர்.

கடந்த மூன்றாண்டுகளாக அரசுப் படைகளுடன் ஹவுத்தி புரட்சிப் படையினர் நடத்திவரும் மோதலில் பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். அரசுப் படையினருக்கு சவுதி அரேபியா தலைமையிலான இஸ்லாமியப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன.

ஹவுத்தி புரட்சிப் படையினரை விமான தாக்குதல் மூலமாக வேட்டையாடும் பணியில் சவுதி தலைமையிலான ஐக்கிய அரபு அமீரக கூட்டுப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2015 ம் ஆண்டில் ஆரம்பித்த இந்த உள்நாட்டுப் போரில் 8,670-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். சுமார் பத்தாயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், சனா நகரில் ஹவுத்தி போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இராணுவ பொலிஸ் முகாமின் மீது சவுதி அரேபியா தலைமையிலான விமானப்படைகள் நேற்று நடத்திய தாக்குதலில் 39 பேர் உயிரிழந்தனர். சுமார் 90 பேர் படுகாயம் அடைந்தனர் இவர்களில் பலர் சிறை கைதிகள் என உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.