வங்கதேச பிரீமியர் லீக் தொடரில் இருந்து சங்கக்காரா தலைமையிலான டாக்கா டைனமிட்ஸ் அணி வெளியேறியது.
வங்கதேச பிரீமியர் லீக் போட்டிகள் டாக்காவில் கடந்த மாதம் 22ம் திகதி முதல் நடந்து வருகிறது.
இதில் முதல் குவாலிபயர் போட்டியில் கோமிலா, ரான்க்பூர் அணிகளும், எலிமினேட்டர் போட்டியில் பரிசல், டாக்கா அணியும் நேற்று மோதின.
குவாலிபயர் போட்டியில் 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கோமிலா அணி இறுதிப் போட்டிக்கு சென்றது.
எலிமினேட்டர் போட்டியில் சங்கக்காரா தலைமையில் களமிறங்கிய டாக்கா அணி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பரிசல் அணியிடம் தோல்வியை தழுவியது. இதனால் தொடரில் இருந்து வெளியேறியது.
இந்த தொடரில் கடந்த சில போட்டிகளில் அசத்திய சங்கக்காரா இந்தப் போட்டியில் 10 ஓட்டங்களே எடுத்தார். இந்த தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் 15ம் திகதி நடக்கிறது.