ஏழு மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
இன்று(04) பகல் 01.00 மணி முதல் நாளை(05) பகல் 01.00 மணிவரை 24 மணித்தியாலங்களுக்கு குறித்த இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, இரத்தினபுரி, கேகாலை, காலி, மாத்தறை, களுத்துறை, ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா ஆகிய பகுதிகளுக்கே இந்த இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.