ஏழு வயது சிறுமி துஷ்பிரயோகம்

ஜயந்திபுர,வான்எல,பகுதியைச் சேர்ந்த எம்.விஜயரத்தின வயது(53)என்பவர் திருகோணமலை ஜயந்திபுர பகுதியில் ஏழு வயது சிறுமியொருவரை  துஸ்பிரயோகத்துக்குட்படுத்தியுள்ளார் அவரை  இம்மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் ருவான் திஸாநாயக்க நேற்று திங்கட்கிழமை (22)உத்தரவிட்டார்.

சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜயந்திர பகுதியில் கடைக்குச் சென்ற சிறுமியை அழைத்து குறித்த 53வயதுடைய சந்தேக நபர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிறுமியின் வீட்டின் அருகிலே சந்தேக நபர் தனிமையில் வசித்து வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேக நபரை ஞாயிற்றுக்கிழமை (21)மாலையில் கைது செய்துள்ளதாக ஜயந்திபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வேண்டி கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாவும், சந்தேக நபரை பொலிஸார் கந்தளாய் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார் .

இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை சூரியபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.