ஐக்­கிய தேசியக் கட்­சியின் மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கைகளும் ரத்தாகும் பதவிகளும்

ஐக்­கிய தேசியக் கட்­சியின் மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கைகள் எதிர்­வரும் மே மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன் போது ஐக்­கிய தேசிய கட்­சியின் முக்­கிய பத­வி­யொன்றில் மாற்றம் செய்­யப்­ப­ட­வுள்­ள­தோடு, மூன்றாம் நிலை இளம் தலை­வர்­க­ளுக்கும் முக்­கிய பத­விகள் வழங்கப்படவுள்ளன.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க எதிர்வரும் ஏப்ரில் மாதம் சீனா­வுக்­கான விஜ­யத்தை முடித்துக்கொண்டு  நாடு திரும்­பி­யதும் கட்சி மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கைகள் ஆரம்பிக்கப்படுமென்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இன்னும், 2005 ஆம் ஆண்டு ஐக்­கிய தேசிய கட்சி எதிர்க்­கட்­சி­யாக இருந்த போது வழங்­கப்­பட்ட பிரதான  பத­விகள் அனைத்தும் இரத்துச் செய்­யப்­ப­ட­வுள்­ள­தா­கவும் கட்சி வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து மேலும் தெரி­ய­வ­ரு­கி­றது.

ஐ.தே.கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் அமைச்சர் பத­வி­களை வகித்து அரசின் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்கும் அதே­வேளை கட்­சியின் இளம் உறுப்­பி­னர்­க­ளுக்கு முக்­கிய பதவிகளை வழங்கி கட்சியின் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொறுப்பு வழங்கப்படவுள்ளதாகவும் குறித்த தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.