ஐ.தே.கட்சியின் பிரச்சாரப் பணிகளுக்கு வெளிநாட்டு பிரதிநிதிகள் குழு.

ஐக்கிய தேசியக்கட்சியின் பிரச்சாரப் பணிகளுக்கு வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் ஆலோசனை வழங்கப்பட உள்ளதாக அக்கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக்கட்சியின் பிரச்சாரப் பணிகள் மற்றும் அங்கத்தினர் இணைப்பு ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஆலோசனை பெற்றுக்கொள்ள வெளிநாட்டு பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.

உலகின் முக்கிய சில நாடுகளின் கட்சிகளது தேர்தல் வெற்றிக்கு ஆலோசனை வழங்கிய பிரதிநிதிகளே இவ்வாறு இலங்கை விஜயம் செய்துள்ளனர்.

பிரச்சாரம் மற்றும் தந்திரோபாயங்களை வகுத்து கட்சிகளை வெற்றியீட்டச் செய்வதில் அனுபவம் மிக்க குழுவொன்றிடம் ஐக்கிய தேசியக் கட்சி ஆலோசனை பெற்றுக்கொள்ள உள்ளது.

இரண்டு வார காலம் இவர்கள் நாட்டில் தங்கியிருந்து ஐக்கிய தேசியக்கட்சிக்கு உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்க உள்ளதாக கட்சித் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.