ஐக்கிய தேசியக் கட்சிக்குள் அதிகாரப் போட்டிகள் இல்லை – கரு

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைப் போன்று அதிகாரத்திற்கும் அந்தஸ்திற்கும் அடித்துக்கொள்ளும் நபர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இல்லை என அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நாட்டை கட்டியெழுப்பும் கொள்கைகளின் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சி செயற்படுகின்றது. எனினும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தரப்புக்கள் அதிகார மோகத்தில் கட்சிக்கு உள்ளேயே முட்டி மோதிக் கொள்கின்றன. இவ்வாறான ஓர் கூட்டமைப்பிற்கு மக்கள் ஆதரவளிக்க மாட்டார்கள்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாட்டை கட்டியெழுப்பும் நோக்கில் செயற்படவில்லை. தாம் செய்த குற்றங்களை மூடி மறைப்பதே அக்கட்சிகளின் பிரதான நோக்கமாக அமைந்துள்ளது.

கடந்த ஜனவரி 8ம் திகதி எடுக்கப்பட்ட மதிநுட்பமான தீர்மானத்தை மக்கள் ஒருபோதும் திரும்பப் பெற்றுக்கொள்ள மாட்டார்கள்.

நல்லாட்சி அரசாங்கத்திற்கு மேலும் அதிக அதிகாரங்களை வழங்குவதே மக்களின் எண்ணமாகும் என அமைச்சர் கரு ஜயசூரிய தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பங்கேற்ற போது மேற்படிக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

(riz)