ஐக்கிய தேசியக் கட்சியினரின் கட்சி ஊழியர் ஊக்குவிப்பு நிகழ்ச்சி பிலிமத்தலாவையில்..

கண்டி நகரில் இன்று(28) ஐக்கிய தேசியக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கட்சி ஊழியர் ஊக்குவிப்பு நிகழ்ச்சி இன்று காலை பிலிமத்தலாவை நகருக்கு அருகில் நடைபெறவுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல அறிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஊழியர் ஊக்குவிப்புக் கூட்டம் இன்று மாலை 2.00 மணியின் பின்னர் கண்டியில் நடாத்துமாறு கண்டி மஜிஸ்ட்ரேட் புத்திக சீ. ராகல நேற்று உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்தே குறித்த இந்த கூட்டத்தை பிலிமத்தலாவையில் நடாத்த ஐ.தே.க. தீர்மானித்துள்ளது.

ஐ.தே.க.யின் குறித்த கூட்டம் நீதிமன்றத்தின் அறிவிப்பின்படி பிற்பகல் வேளையில் கண்டியில் நடாத்துவதனால் உற்சாகம் இழந்த ஒன்றாக காணப்படும் அமைச்சர் கூறியுள்ளார். இவ்வாறான நிகழ்ச்சிகள் காலையிலேயே ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.