மாகாண சபை உறுப்பினரான ஹிருணிகா பிரேமச்சந்திர சிறிது நேரத்திற்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சி வேட்புமனுவின் கீழ் பொது தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பாளர் கையெழுத்திட்டார்.
அவர் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவாரென, துணை வெளியுறவு அமைச்சர் பெரேராஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
மேலும், ஹிருணிகா பிரேமச்சந்திர ஜனவரி (8) 2015, ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை ஜனாதிபதியாக்குவதில் பிரச்சாரம் செய்த முக்கிய ஸ்ரீ.ல.சு.க. உறுப்பினர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு வேட்புமனு வழங்க எடுத்த முடிவினை வன்மையாக எதிர்த்தார்.
(riz)