ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் அடுத்த வாரம்…

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தலைமையில் சிறிகொத்தவில் அடுத்த வாரம் இடம்பெறவுள்ளதாக கட்சியின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கட்சியின் 71ஆவது ஆண்டு நிறைவு விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்தும், சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பிலும் கலந்துரையாடுவதற்காகவே மத்திய குழு இவ்வாறு கூடவுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் 71ஆவது ஆண்டு நிறைவு விழாவை கடந்த 11ஆம் திகதி இரத்தினபுரியில் நடத்துவதற்கு முன்னதாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

எனினும், சீரற்ற காலநிலை காரணமாக மாநாடு பிற்போடப்பட்டது.

இந்நிலையிலேயே மாநாட்டுக்கான திகதியைத் தீர்மானித்தல், நடத்துதல் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இறுதி முடிவெடுக்கப்படவுள்ளது.

மேலும், தேர்தல் சம்பந்தமாகவும் இதன்போது விரிவாக ஆராயப்படவுள்ளன என ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு வட்டாரத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

 

(rizmira)