ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தைக் கவிழ்க்க சூழ்ச்சி – ஹரீன்

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தைக் கவிழ்க்க சூழ்ச்சியொன்று முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார்.

மேலும், அரசாங்கத்தைக் பல்வேறு சக்திகள் கட்டுப்படுத்த முயற்சிப்பதாகவும் இதன்போது அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பி.பி.சி. சிங்கள சேவைக்கு வழங்கிய செவ்வியின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டில் முன்னெடுக்கப்படும் நல்ல திட்டங்களை தாமே காரணம் எனக் காட்டிக்கொள்ளவும், நடைபெறும் துரதிஷ்டவசமாக சம்பவங்கள், பிழைகள் ஆகியவற்றுக்கு ஐக்கிய தேசியக் கட்சியே காரணம் என்று அடையாளப்படுத்தவும் ஒரு தரப்பினர் முயற்சித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சரியான அரசியல் நோக்குடன் அவதானித்தால் அரசாங்கத்திற்கு உட்புறமாக வேறொரு சக்தி இயங்குவதை அவர்களுக்கு அவதானிக்க முடியும் என்றும் ஹரீன் பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார்.