ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றினால் உத்தரவு…

ஐக்கிய தேசியக் கட்சியினரால் முன்னெடுக்கப்படவுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொது மக்களுக்கு ஏற்படும் இடையூறுகள் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அரச நிறுவனங்களுக்குள் உட்புகுவதை தடுப்பதற்கு நீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்டுள்ளது.

கறுவாத்தோட்ட பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே இந்த அனுமதியை வழங்கி உத்தரவிட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

மேலும், கொழும்பில் இன்று எந்தவொரு அசம்பாவிதங்களும் இடம்பெறுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ் மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.