(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியினால் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தாவிடின் அவர் பிரிதோர் கட்சியினால் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க அதிகளவு வாய்ப்புக்கள் இருப்பதாக அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்திருந்தார்.
அவ்வாறு ஏதும் இடம்பெற்றால் அவரை கட்சியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வாய்ப்புக்கள் உள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.