ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையும் ஜேவிபி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மக்கள் விடுதலை முன்னணி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வழங்க தயாராக இருந்ததாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்ஹ தெரிவித்திருந்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கரு ஜயசூரியவின் பெயர் முன்வைக்கப்பட்டால், மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்காதிருக்க கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடும் வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.