ஐக்கிய தேசிய கட்சியினர் பிரதமர் தலைமையில் நாளை(23) கூடுகிறது

(FASTNEWS | COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சியின் அனைத்து அமைச்சர்களையும் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை(23) அலரிமாளிகைக்கு அழைத்துள்ளதாக கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 4 வருட பூர்த்தியை முன்னிட்டு இந்த விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல், ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்கால செயற்பாடு என்பன தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.