ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு இன்று…

ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அலரிமாளிகையில் ஆரம்பமாகியுள்ளது.

இதன்போது முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஒழுக்காற்று விசாரணை அறிக்கை முன்வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் தலை தூக்க வேண்டும் என்ற வகையில் விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில், நான்கு பேர் அடங்கு குழு ஒன்று இந்த விசாரணை அறிக்கையை தயாரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

R.Rishma