ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில், கொழும்பு நகர சபை மைதானத்திற்கு அருகில் ஆரம்பிக்கப்பட்ட, ஜனநாயகத்தை நிலை நிறுத்தும் நீதிக்கான வாகனப் பேரணி தற்சமயம் அழுத்தகம பிரதேசத்தை ஊடறுத்து செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இந்த பேரணி காலி, மாத்தறையை ஊடாக தெவுந்தர பகுதியில் நிறைவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாளை(02) தங்காலை நகரில் மக்கள் பேரணியொன்று நடத்தப்பட்டு, பின்னர் வாகனப் பேரணி கதிர்காமம் ஆலயத்தை வந்தடையவுள்ளது.
அத்துடன், மொனராகலை ஊடாக மகியங்கனை ரஜமகா விகாரைக்கு பயணித்து அங்கு வழிபாட்டு நிகழ்வுகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.