ஐக்கிய தேசிய கட்சியின் 71ம் ஆண்டு நிறைவு எதிர்வரும் 10ம் திகதி இரத்தினபுரி சீவலி மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், குறித்த நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக இரத்தினபுரி பிரதேசம் வெள்ள நிலைக்கு உள்ளாகியுள்ளதால் ஐக்கிய தேசிய கட்சியின் நிகழ்வு நடைபெறும் மேடை நீரில் மூழ்கியுள்ளதாகவும், ஆண்டு நிறைவு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் கட்சியின் வட்டாரத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

(rizmira)