ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பில் விளக்கம்…

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால், அடுத்த வருடம் மார்ச் மாதம் 21ம் திகதி விளக்கமளிப்பு நிகழ்வு இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தகால பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, கடந்த மார்ச் மாதம் இலங்கை அரசாங்கத்துக்கு 2 வருட கால அவகாசம் வழங்கும் தீர்மானம், மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒருவருட காலத்தில், இலங்கை அரசாங்கம் கண்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில், மனித உரிமைகள் ஆணையாளரது அலுவலகம் விளக்கமளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை ஒன்றும் அன்றையதினம் முன்வைக்கப்படவுள்ளது.