(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
ஐ.ம.சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் நேற்று (17) அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பதினைந்துக்கும் இருபதுக்கும் இடைப்பட்ட உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணையும் நம்பிக்கையில் உள்ளனர். இந்த எம்.பி.க்களில் அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் சிரேஷ்ட உறுப்பினர்கள் முன்னிலையில் இருப்பதும் சிறப்பு. இந்த எம்.பி.க்கள் அண்மையில் இரகசிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தி இந்த முடிவை எடுத்துள்ளனர்.
எதிர்வரும் வேலைத்திட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
எனினும், கட்சியின் பொதுச் செயலாளரினால் அறிவிக்கப்பட்ட தையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் இன்று (18ஆம் திகதி) காலை பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து கலந்துரையாடல் ஒன்றை நடத்தவும் திட்டமிட்டிருந்தார்.