சர்வதேச கிரிக்கெட் சம்மேளத்தின் “ஹோல் ஒவ் பேம்” கௌரவப் பட்டியலில் ராகுல் டிராவிட், ரிக்கி பொண்டிங், கிளைர் டெய்லர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள், அதிக விக்கெட்டுக்கள் மற்றும் பல்வேறு சாதனைகள் படைத்தவர்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அவர்களை ஐ.சி.சி.யின் அதியுச்ச கௌரவமான “ஹோல் ஒவ் பேம்” என்ற பட்டியலில் இணைத்து கௌரவித்து வருகிறது.
குறித்த பட்டியலில் இலங்கை அணியின் முரளிதரன் இணைக்கப்பட்டு கடந்த ஆண்டு அவருக்கான விருதை ஐ.சி.சி. வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த வருடம் மூவரை இந்த கௌரவப் பட்டியலில் ஐ.சி.சி. இணைத்துள்ளது. இதில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் மற்றும் அவுஸ்திரேலியாவின் முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங் மற்றும் இங்கிலாந்து மகளிர் அணி வீராங்கனை கிளைர் டெய்லர் ஆகியோராவர்.