ஐந்தாவது நாளாகவும் தொடரும் ஆர்ப்பாட்டம்…

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டம் இன்று(11) ஐந்தாவது நாளாகவும் தொடர்கிறது.

இவர்கள் துறைமுகத்தின் நுழைவாயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.

483 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரியே இவர்கள் இந்த எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, நேற்றையதினம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தை கலைக்க முற்பட்ட வேளை, அங்கு குழப்பநிலை ஏற்பட்டது.

இதன்போது சில ஊழியர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதன்படி காயமடைந்த நான்கு ஊழியர்கள் தொடர்ந்தும் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.