ஐந்து இலட்சம் பெறுமதியான சிகரட் தொகையுடன் ஒருவர் கைது…

சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ஐந்து இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு சிகரட் தொகையுடன் ஒருவர் இன்று(13) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர் வென்னப்புவ – மாரவில பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதுடன், இன்று அதிகாலை டுபாயில் இருந்து இலங்கை வந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது பயணிப்பையில் இருந்து 10 ஆயிரம் சிகரட்டுக்கள் அடங்கிய 50 பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிரகட் தொகை அரசுடமையாக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.