ஐந்து இலட்சம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம்…

ஐந்து இலட்சம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று(27) மாலை ஜனாதிபதி செயலகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

அரிசி, பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு என்பவற்றை தற்போதைய விலையை விட குறைந்த விலைக்கு சதொச ஊடாக இன்று முதல் நுகர்வோருக்கு வழங்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

அதேவேளை, மக்களுக்கு குறைந்த விலையில் தேங்காயை விற்பனை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.