ஐந்து மாகாணங்களுக்கு இரவு நேரங்களில் கடும் மழை

(FASTNEWS | COLOMBO) – மேல் , சப்ரகமுவ , மத்திய , தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் கடும் மழை எதிர்ப்பார்க்கப்படுவதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இன்று(22) மாலை குறித்த நிலையத்தால் வௌியிடப்பட்ட எதிர்வரும் 36 மணித்தியாலத்திற்கான வானிலை அறிக்கையில் மேற்குறித்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.