(FASTNEWS-COLOMBO) இரத்தினபுரி, களுத்துறை, நுவரெலியா காலி மற்றும் மாத்தறை மாவட்டத்தின் சில பிரதேசங்களில் எதிர்வரும் 24 மணித்தியாலத்தில் 150 மில்லி மீட்டர் வரையில் மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேலும், ஊவா மாகாணம் கேகாலை, கொழும்பு, கம்பஹா, கண்டி, மாத்தளை மற்றும் ஹம்பாந்தொடை மாவட்டங்களில் 100 மில்லி மீட்டர் வரையில் கடும் மழை பொழிய கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பொழியும் போது 70 – 80 கிலோ மீட்டர் வேகத்தில் கடும் காற்று வீச கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.