நுவரெலியா, இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை மற்றும் காலி முதலான ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலாவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
இயற்கை அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 வரை அதிகரித்துள்ளது. 20 மாவட்டங்களில் 157 பிரதேச செயலாளர் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளன. 36 ஆயிரத்து 50 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 41 ஆயிரம் பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.