கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி மும்பை அணி 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இதைத் தொடர்ந்து மும்பை அணி வீரர்கள் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். வீரர்களின் கொண்டாடங்களை பார்க்க ரசிகர்களுக்கும் இலவச அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் மும்பை அணியின் உரிமையாளரான நீட்டா அம்பானி, மும்பை அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் தனது வீட்டில் சிறப்பு விருந்து கொடுத்துள்ளார்.
இந்த விருந்தில் சச்சின் டெண்டுல்கர் தனது மனைவி அஞ்சலியுடன் பங்கேற்றார். மேலும், பொண்டிங், கும்ளே, ஜான்டி ரோட்ஸ் மற்றும் பல்வேறு வீரர்கள் கலந்து கொண்டனர்.
இது தவிர, பாலிவுட் நடிகை ஜஸ்வர்யா, அவரது கணவர் அபிஷேக் பச்சன் உள்ளிட்ட பல பிரபலங்களும் இந்த விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.