அநுராதபுரம் – இக்கிரியாகொல்ல பகுதியில் இருந்து கேரளா கஞ்சா போதை பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
40 கிலோ கிராம் எடையை கொண்ட சுமார் 50 இலட்சம் பெறுமதியான கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
சந்தேகநபருடன் அதி சொகுசு வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர் அநுராதபுரம் – யாழ்ப்பாணம் சந்தியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு சுங்கத் திணைக்களத்தின் போதை பொருள் தடுப்பு பிரிவினர் இவரை கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் கொழும்பு – நாரஹேன்பிட்டியிலுள்ள சுங்க திணைக்கள அலுவலகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன.