இந்தியாவின் ஐம்மு-காஷ்மீரில் ஸ்ரீநகர் விமான நிலையத்தை அண்மித்து எல்லைப் பாதுகாப்பு படை முகாம் மீது தற்கொலைப்படை தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்று(03) அதிகாலை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது எல்லைப் பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தாக்குதல் நடத்தியதில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் 3 இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஸ்ரீநகர் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கபட்டுள்ளது.