ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்களை இரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நீதிக்கான அமைப்பின் அழைப்பாளர் பேராசிரியர் சரத் விமலசூரிய ராஜகிரியவில் நேற்று(16) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;
“.. தற்போதைய பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக 5000 ரூபா நாணயத் தாள்களை இரத்து செய்ய வேண்டும். இறக்குமதிகளை வரையறுப்பதனை விடவும் அரசியல்வாதிகளின் நன்மதிப்பினை மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்காக ஒதுக்கீடு செய்யப்படும் செலவுகள் குறைக்கப்பட வேண்டும்.
கடந்த காலத்தில் கறுப்பு பணத்தை வெளிக் கொண்டு வரும் நோக்கில் நிதி அமைச்சராக கடமையாற்றிய என்.எம். பெரேரா 100 மற்றும் 50 ரூபா நோட்டுக்களை இரத்து செய்திருந்தார் எனவும் அதே விதமாக 5,000 ரூபா தாளையும் குறைக்க வேண்டுமென்பதே எமது நிலைப்பாடு.
வழிபாட்டுத் தளங்கள், அரசியல்வாதிகள் போன்ற தரப்புக்களிடம் பாரியளவில் 5,000 ரூபா நாணயத்தாள்கள் காணப்படுவதாகவும் கொள்கலனில் நிரப்பும் அளவிற்கு பணம் இருக்கின்றது…” எனவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.