ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு 38 மில்லியன் யூரோக்கள்

இலங்கையின் கிராமியப் புறங்களில் வர்த்தக மற்றும் அபிவிருத்தி துறைகளின் முன்னேற்றத்திற்காக 38 மில்லியன் யூரோ பெறுமதியான வேலைத்திட்டத்தற்கான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது.

இதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் சர்வதேச மற்றும் அபிவிருத்தி ஆணையாளர் மிமிகா மூன்று நாள் உத்தியோகபூர்வ சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.

அபிவிருத்தி துறையில் இலங்கையுடன் மிக நீண்ட காலமாக காணப்படுகின்ற உறவுகளை மேலும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த புதிய ஒத்துழைப்பு இலங்கைக்கு வழங்கப்பட உள்ளதாகவும் மிமிகா மேலும் கூறியுள்ளார்.

யுத்தம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட பின்னர் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு மிகவும் முக்கியமான ஒத்துழைப்பாக மனிதாபிமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் முடிந்துள்ளது என்றும் அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்

மிமிகாவின் இந்தச் சுற்றுப்பயணத்தின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாட உள்ளார்.