பிரசல்ஸ் பெல்ஜியம் தலைநகர் பிரசல்சில் கடந்த வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்கள் ஐரோப்பிய கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், உள்பட ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் 28 பேர் கலந்து கொண்டனர். மாநாட்டில் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் எதிர்காலம் பற்றி கலந்து ஆலோசிக்கபட்டது.
இந்த கூட்டத்தில் 28 நாடுகளின் தூதர்களும் கலந்து கொண்டனர்.அங்கு ஜெர்மனியை தூதர்கள் நடந்து கொண்ட விதம் உலகநாடுகளின் நகைப்புக்கு உள்ளாக்கி உள்ளது.
மாநாடு நடைபெற்ற கட்டிடத்திற்கு அடுத்து இருந்த லெக்ஸ் பில்டிங் கழிவறையில் வைத்து ஜெர்மனி தூதர்கள் பாலியல் உறவில் ஈடுபட்டு உள்ளனர்.இதனை ஸ்லோவேனிய தூதர்கள் கண்டறிந்து உள்ளனர்.