ஐரோப்பிய வெள்ளத்தில் ஐவர் பலி

ஐரோப்பாவில் இடம்பெற்ற வெள்ளம் காரணமாக ஐந்து பேர் பலியாகியுள்ளனர்.

ஜெர்மன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இந்த உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

நீர் மட்டம் உயர்வடைந்து செல்வதாகவும் குறித்த இரண்டு நாடுகளிலும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இன்னும் சில நாட்களுக்கு நீர் மட்டம் தொடர்ச்சியாக உயர்வடையும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், மழை வெள்ளம் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாரியளவில் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.