(FASTNEWS|COLOMBO) – உலகிலேயே அமைதி நிறைந்த நாடுகள் பட்டியலில் ஐஸ்லாந்து நாடு உலகிலேயே அதிக அமைதி நிலவும் நாடாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தனியார் அமைப்பு ஒன்று நடப்பு ஆண்டுக்கான உலகிலேயே அமைதி நிறைந்த நாடுகள் பற்றிய ஆய்வினை மேற்கொண்டது. இந்த ஆய்வு மக்களின் பாதுகாப்பு, உள்நாட்டு பிரச்சனைகள் போன்ற 23 காரணிகளைக் கொண்டு எடுக்கப்பட்டது.
இதனையடுத்து நியூசிலாந்து, ஆஸ்திரியா, போர்ச்சுக்கல், டென்மார்க் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. மொத்தம் 163 நாடுகள் கொண்ட இந்த பட்டியலில் இந்தியா 141வது இடத்தை பிடித்துள்ளது.
மேலும் இந்த அறிக்கையில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து எடுக்கப்பட்ட ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் இந்தியா, ஜப்பான், பங்களாதேஷ், மியான்மர், சீனா, இந்தோனேஷியா, பிலிபைன்ஸ், வியட்நாம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் பருவநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.