86 கிராம் 410 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நபரொருவர் வட்டுக்கோட்டை – சித்தன்கேணி பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் வட்டுக்கோட்டை – மாதகல் பகுதியை சேர்ந்த 21 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது.
இதேவேளை, 5 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மேலும் ஒரு நபர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் கிரேண்பாஸ் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளர்.
அவரிடமிந்து சுமார் 10 கிராம் அளவான ஹெரோயினும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.