ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த ஒருவர் கைது…

பேலியகொடை – மீகஹவத்த, வெலிபார பிரதேசத்தில் 300 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த 29 வயதுடைய நபரொருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேலியகொடை குற்றவியல் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் இன்று(21) புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.