ஐ.எஸ் இல் இணைந்து கொண்ட இலங்கையர்கள் தொடர்பில் விசாரணை

ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பைப் பேணுவோர் பற்றிய விபரங்களின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

இதன்படி,இலங்கையிலிருந்து அந்த அமைப்பில் இணைந்து கொண்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் பற்றிய விபரங்கள் திரட்டப்பட்டுள்ளன.இவர்கள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தற்போது,தீவிரவாத அமைப்பில் இணைத்துக் கொள்வதற்காக சமூக வலையமைப்புக்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன.ஏற்கனவே ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைந்து கொண்டுள்ள இலங்கையர்கள் ஏனையவர்களை இணைத்துக்கொள்ள முயற்சிக்கின்றனர்.

இந்த முயற்சியானது தேசியப் பாதுகாப்பிற்கு தற்போதைக்கு பாதிப்பு ஏற்படுத்தாத போதிலும் அவர்களது முயற்சிக்கு இடமளிக்கப்படாது.

தீவிரவாத அமைப்புடன் தொடர்பு பேணுவோர் மற்றும் அவர்களது குடும்பங்கள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் கண்காணிப்பு செய்வதுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும், இலங்கையில் ஐ.எஸ் தீவிரவாதம் பரவுவதனை தடுத்து நிறுத்த முஸ்லிம் சமூகத்தின் ஒத்துழைப்பும் பங்களிப்பும் அவசியமானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ் இல் இணைந்து கொண்ட இலங்கையர்கள் கண்டுபிடிப்பு

இலங்கையில் ஐ.எஸ் அமைப்பினர் வியாபிப்பதனை தடுப்பதற்கு இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் ஒத்துழைப்பும் பங்களிப்பும் அவசியம் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், உலகின் மிகவும் மோசமான பயங்கரவாத அமைப்பாக உருவாகி வரும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் இணைந்து கொண்டுள்ள இலங்கையர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் யார் என்பதனை புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.

சமூக ஊடக வலையமைப்புக்களைப் பயன்படுத்தி அமைப்பிற்கான உறுப்பினர்களை இணைத்துக் கொள்ளும் முயற்சியில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
ஏற்கனவே தீவிரவாத அமைப்பில் இணைந்து கொண்டுள்ள இலங்கையர்கள், மேலும் உறுப்பினர்களை அமைப்பில் இணைத்துக் கொள்ள முயற்சிக்கின்றனர்.

மூளைச் சலவை மூலமாகவும், வரப்பிரசாதங்களை வழங்குவதன் மூலமும் உறுப்பினர்களை இணைத்துக் கொள்ளும் முயற்சியில் தீவிரவாத அமைப்பு ஈடுபட்டுள்ளது. ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு இலங்கையில் வியாபிப்பதனை தடுக்க இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் ஒத்துழைப்பும் பங்களிப்பும் அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.