ஐ.எஸ். தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க துருக்கி விமானத்தளம் அமெரிக்காவிற்கு அனுமதி

ஈராக் மற்றும் சிரியாவில் செயல்படும் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது கூட்டு படைகள் விமான தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில் அமெரிக்க விமானங்கள் ஈராக் விமான தளங்களையும் மற்றும் நட்பு நாட்டு விமான தளங்களையும் பயன்படுத்தி வருகின்றன.

அத்துடன் கடலில் நிறுத்தப்பட்டுள்ள விமானம் தாங்கி கப்பல்களில் இருந்தும் விமானங்கள் புறப்பட்டு சென்று தாக்குதல் நடத்தி வருகின்றன.

சிரியாவில் செயல்படும் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குவதற்கு சரியான விமான தளம் அமையவில்லை. சிரியாவை ஒட்டி உள்ள துருக்கியில் இன்கிரீலிக் என்ற இடத்தில் விமான தளம் ஒன்றுள்ளது. இது சிரியாவின் எல்லை பகுதியில் அமைந்தள்ளது. அங்கிருந்து விமானங்கள் பறந்து சென்றால் சிரியாவில் எளிதாக தாக்குதல் நடத்த முடியும்.

எனவே, அந்த விமான நிலையத்தை பயன்படுத்திக்கொள்ள துருக்கியிடம் அமெரிக்கா அனுமதி கேட்டது. ஆனால் அனுமதி கொடுக்க துருக்கி மறுத்து வந்தது.

நீண்ட நாள் பேச்சுவார்தைக்கு பிறகு இப்போது இன்கிரீலிக் விமான நிலையத்தை பயன்படுத்தி கொள்ள துருக்கி அனுமதியளித்துள்ளது. இதன் மூலம் ஐஎஸ். தீவிரவாதிகள் மீது தாக்குதல் தீவிரமாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(riz)