ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளினால் இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்படலாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரிக்கும் போது மத்திய கிழக்கில் ஸ்தீரமில்லாத நிலை இதன் போது இலங்கையில் ஏற்படும் பொருளாதார நெருக்கடிக்கு நாம் இப்போதே தயாராக வேண்டும்.
வரவு, செலவுத் திட்டத்தில் குறைபாடுகள் இருப்பின் எதிர்க்கட்சிகள் யோசனைகளையும் திருத்தங்களையும் முன்வைக்கலாம் என்றும் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்றை தினம் இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான 8ஆம் நாள் விவாதத்தினை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், அமெரிக்காவைத் தவிர்ந்த உலகின் பல்வேறு நாடுகளில் பொருளாதார நெருக்கடி தலைதூக்கி வருகின்றது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ். நடவடிக்கைகள் அதிகரிக்கும்போது மத்திய கிழக்கில் ஸ்திரமில்லாத நிலை தலைதூக்கும்.
இதனால் எமது நாட்டிலும் பாரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும். அவ்வாறான நிலை ஏற்பட்டால் அதனை சமாளிப்பதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கையாக சர்வதேச நாணய நிதியத்துடன் சில நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நிதியமைச்சர் தயாராகவுள்ளார் எனவும் தெரிவித்தார்.