இதுவரையில் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராகவே அதிக முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக பெபரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டிஆராச்சி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக 392 முறைப்பாடுகளும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு எதிராக 376 முறைப்பாடுகள், மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிராக 34 முறைப்பாடுகள் மற்றும் ஏனைய கட்சிகளுக்கு எதிராக 29 முறைப்பாடுகள் பெபரல் அமைப்பிற்கு கிடைத்திருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேர்தல் வன்முறை சம்பவங்கள் காரணமாக அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பதும் ஐக்கிய தேசிய கட்சி என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
(riz)