1977 ஆம் ஆண்டு பெறப்பட்ட மாபெரும் வெற்றியை போன்றே இந்தத் தடவையும் ஐக்கிய தேசியக் கட்சி பொதுத்தேர்தலில் வெற்றி பெறும் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் காரணமாக ஐக்கிய தேசியக்கட்சிக்கு பாரிய நன்மை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களும் போதைவஸ்துடன் தொடர்புடயோரையும் களத்தில் இறக்கியுள்ளது என்று விஜயதாஸ மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
(riz)