ஐ.தே.கட்சியின் அரசியல் பீடம், இன்று கூடுகிறது…

ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் பீடம், இன்று(11) முதன் முறையாக கூடவுள்ளதாக அரசியல் பீட வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசிய கட்சியின் பதவி நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது உள்ளிட்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் நிமிர்த்தம் ஐக்கிய தேசிய கட்சியின் 12 உறுப்பினர்களைக் கொண்ட குறித்த அரசியல் பீடம் அண்மையில் நியமிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்றைய கூட்டத்தில் ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகளே இடம்பெறும் என்றும், முக்கியமான தீர்மானங்கள் எவையும் மேற்கொள்ளப்பட வாய்ப்புகள் இல்லை என்றும் உள்ளக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

 

Rishma