ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியினை உருவாக்க நேற்று(11) இரவு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடன்பாட்டுக்கு வந்ததாக ஐக்கிய தேசிய கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியவை ஒன்று சேர்ந்து தேசிய அரசொன்றினை கொண்டு செல்ல முடியாது என்ற காரணத்தினால் ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கையில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியினை உருவாக்குமாறு ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்று(11) மாலை கோரியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய அரசுக்காக ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிகளுக்கு இடையிலான உடன்படிக்கை டிசம்பர் 31ம் திகதி முடிவுற்றிருப்பதால் எச்சந்தர்ப்பத்திலும் தனியான ஆட்சியினை முன்னெடுக்க முடியும் என்பது இரு கட்சிகளினதும் நிலைப்பாடு என்பதும் குறிப்பிடத்தக்கது.
#rishma