(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் தம் வாய்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் இல்லையென்றால் அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கருத்து தெரிவித்துள்ளார்.
குருநாகல் சத்யவாதி மைதானத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டத்தில் வைத்தே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எங்களுக்கு ஜம்பர் அணிவிப்பதாக சொன்ன சிலருக்கு அந்த கட்சியே ஜம்பர் அணிவிக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே வாய்களை பாதுகாத்து ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் செய்லபட வேண்டும். இல்லை என்றால் அவர்களுக்கு அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும்.
அதேவேளை எந்த அபிவிருத்தியும் நாட்டுக்குள் கிடையாது. பொருளாதாரம் சீரழிக்கப்பட்டுள்ளது. கிராம மக்களின் கைகளில் பணம் இல்லை. வியாபாரிகள் நிலைகுலைந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.