ஐ.தே.கட்சியின் சார்பில் போட்டியிட பத்தாயிரம் போ் விண்ணப்பம்…

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் பத்தாயிரம் போ் விண்ணப்பம் செய்துள்ளனர்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இவ்வாறு பெரும் எண்ணிக்கையிலானவர்கள் விண்ணப்பம் செய்துள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த இந்த விண்ணப்பங்கள் எதிர்வரும் நாட்களில் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட உள்ளதோடு, விண்ணப்பப்படிவங்கள் தொடர்ந்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டு வருவதாகவும், தேர்தல் திகதி அறிவிக்கப்படும் வரையில் அவை ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(rizmira)