(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக தொடர்ந்தும் ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் பிரேரிக்கப்பட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் , அதிகார பகிர்வு, நிறைவேற்று அதிகார ஒழிப்பு, தேர்தல் முறை சீர்திருத்தம் என்பவற்றை செய்வதற்காக பணிகள் தொடர வேண்டும் எனவும் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.
மேலும், பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை பலத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும், அரசியல் பழிவாங்களுக்கு ஆளானோருக்கு நியாயம் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.