ஐ.தே.கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்தும் விஜயதாச ராஜபக்‌ஷ நீக்கம்..!

அமைச்சரவைக் கூட்டுப் பொறுப்பை மீறி, பகிரங்க விமர்சனத்தை மேற்கொண்டமையால், நீதி மற்றும் புத்த சாசன அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்ட, ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் விஜயதாச ராஜபக்‌ஷ, மீண்டுமொரு தடவை பதவியிழக்கவுள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் மஹரகம தேர்தல் தொகுதியின் அமைப்பாளராக, விஜயதாச ராஜபக்‌ஷ பதவி வகிக்கும் நிலையில், குறித்த பதவியை, தேசிய இளைஞர் சபையின் தலைவர் எரங்க வெலியன்ககே இற்கு வழங்கப்பட உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

(rizmira)