(FASTNEWS|COLOMBO ) – ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஒன்று இன்று(20) இரவு இடம்பெறவுள்ளது.
குறித்த சந்திப்பு சஜித் பிரேமதாஸவின் கொழும்பில் உள்ள இல்லத்தில் இடம்பெற உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வியேஜபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்காக ஐக்கிய தேசியக் கட்சியினால் முன்னிறுத்தப்படவுள்ள வேட்பாளர் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட உள்ளதாகவும், சஜித் பிரேமதாஸவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய குர்த்த இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.