ஐக்கிய தேசியக் கட்சியின் மூன்று உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட உள்ளது.
அரசாங்கத்தின் அடிப்படை கொள்கைகளுக்கு எதிராக கருத்து வெளியிடுதல், நாடாளுமன்றில் ஆளும் கட்சியின் தீர்மானங்களை மீறி செயற்படுதல் ஆகியன தொடர்பில் இந்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகவும் ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் விரைவில் ஒழுக்காற்று விசாரணைகளுக்காக அழைக்கப்படுவர் என கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எப்போது இந்த விசாரணைகள் நடத்தப்படும் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.